தீவிரமடையும் பறவை காய்ச்சல்..!! மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை..!! மக்களே உஷார்..!!
நமது நாட்டில் பறவை காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் தங்கள் நோய் கண்காணிப்பை அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
நமது நாட்டில் இப்போது ஆங்காங்கே பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பறவை காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இனை நோய்கள் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இந்த பறவை காய்ச்சலால் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளலாம் என்பதால், இவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
பறவை காய்ச்சல் எனப்படும் எச்1என்1 பாதிப்புகளைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போட்டுள்ளதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நமது நாட்டில் ஜார்கண்ட் போன்ற சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பறவை காய்ச்சல் காரணமாக ஒரு இடத்தில் அமைந்துள்ள கோழிப்பண்ணையின் இரண்டு மருத்துவர்கள் மற்றும் 6 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கேரளாவின் ஆலப்புழாவிலும் இரண்டு இடங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
A(H5N1) வைரஸ் எனப்படும் ஆசிய ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் முக்கியமாகப் பறவைகளிடையே தான் பாதிக்கிறது. என்றாலும் கூட அவை அரிய சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கும் பரவுகிறது. ஏற்கனவே இந்த வைரஸ் பாதிப்பு இருக்கும் பறவைகளுடன் தொடர்பு கொள்ளும் போது மனிதர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே இந்த சீசனில் உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கண்டறியப்பட்டதாகத் தகவல் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பறவை காய்ச்சல் எப்போதும் பறவைகளில் இருந்து மட்டுமே மனிதர்களுக்குப் பரவும். ஆனால், சமீபத்திய காலங்களில் அவை பாதிக்கப்பட்ட மனிதரிடம் இருந்து கூட நேரடியாக மற்றவர்களுக்குப் பரவும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்த பறவை காய்ச்சல் நேரடியாக வைரஸால் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவ வாய்ப்பு இல்லை என்றே கூறியுள்ளது. மேலும், முறையாகச் சமைக்கப்படாத பாலை எடுத்துக் கொண்டால், அது A(H5N1) வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கொதிக்க வைக்கப்பட்ட பாலை மட்டுமே பயன்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.
காய்ச்சிய பாலை பயன்படுத்துவது, இறைச்சியை முறையாக சமைத்து சாப்பிடுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் வைரஸ் பாதிப்பைத் தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், பருவகால காய்ச்சலும் அதிகரிக்கும் நிலையில், அது குறித்தும் மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பருவகால காய்ச்சல் நிலைமையை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. நிலைமை கட்டுக்குள் இருப்பதால் இப்போது கவலைப்படத் தேவையில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : இளைஞர்களே உஷார்..!! அச்சுறுத்தும் கொழுப்பு கல்லீரல்..!! ஆரம்பித்திலேயே சரிசெய்ய சூப்பர் வழிமுறைகள்..!!