For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தீவிரமடைந்த கோடை மழை..!! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

11:17 AM May 14, 2024 IST | Chella
தீவிரமடைந்த கோடை மழை     9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை     வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்
Advertisement

கேரளாவில் கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்கள் ஒரு சில இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் மாக்கினாம்பட்டி, பொள்ளாச்சி, தூத்துக்குடியில் நேற்று கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பொள்ளாச்சி, தூத்துக்குடியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

கோவை மாவட்டம் ஆழியார், ஸ்ரீவில்லிபுத்தூர், நத்தம், வீரபாண்டி, நீலகிரி பார்வுட் எஸ்டேட்டில் தலா 6 செ.மீ. மழையும், குமரி மாவட்டம் கலியல், மைலாடி, கோவை மாவட்டம் சின்கோனாவில் தலா 5 செ.மீ. மழைப் பொழிந்துள்ளது. திற்பரப்பு, கோழிப்போர்விளை உள்ளிட்ட 12 இடங்களில் தலா 4 செ.மீ. மழையும், ஆனைக்கிடங்கு, எலந்தகுட்டை மேடு, சந்தியூர், மூலனூர் உள்ளிட்ட 17 இடங்களில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 2 செ.மீ. மழை, 100க்கும் மேற்பட்ட இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Read More : திருமணத்திற்கு பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்க என்ன காரணம்..? நிபுணர்கள் சொல்வது என்ன..?

Advertisement