For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தீவிரமடையும் காய்ச்சல் பாதிப்பு..!! உடனே இதை பண்ணுங்க..!! இல்லைனா உயிருக்கே ஆபத்து..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

07:34 AM Nov 18, 2023 IST | 1newsnationuser6
தீவிரமடையும் காய்ச்சல் பாதிப்பு     உடனே இதை பண்ணுங்க     இல்லைனா உயிருக்கே ஆபத்து     எச்சரிக்கும் மருத்துவர்கள்
Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் வேகமாக பரவத்தொடங்கும். குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைக்கால நோய் பரவல் அதிகமாக இருக்கும். அந்த வகையில், இந்தாண்டும் தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

Advertisement

காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வைரஸ் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது எந்த வகையான காய்ச்சல் என்பதை கண்டறிய, தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மொத்தம் 300 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இன்ஃப்ளூயென்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும், இன்ஃப்ளூயென்ஸா ஏ வகை காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல்வலி, அதீத காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும். காய்ச்சலின் தன்மையை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொண்டை வலியுடன் காய்ச்சல் இருந்தால் அதற்கு சாதாரண முறையில் சிகிச்சை அளிக்கப்படும். அதே நேரம் குழந்தைகள், முதியவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து வழங்கப்படுகிறது.

மாறாக அதீத காய்ச்சல், சளி, தொண்டை வலி, வாந்தி போன்றவை இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
Advertisement