முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”கோயில் பணத்தை சூறையாடுவதற்கு பதில் அறநிலையத்துறையை கலைத்து விடுங்கள்”..!! பொன்.மாணிக்கவேல் பரபரப்பு பேட்டி..!!

Former IG of the Idol Smuggling Prevention Unit Pon Manickavel has spoken out vehemently calling for the dissolution of the Hindu Religious Endowments Department, which is looting temple funds.
02:40 PM Nov 22, 2024 IST | Chella
Advertisement

கோயில் பணத்தை சூறை​யாடி வரும் இந்து சமய அறநிலையத் துறையை கலைக்க வேண்டுமென சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்​னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க​வேல் ஆவேசமாக பேசியுள்ளார்.

Advertisement

சேலம் சுகவனேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை, மக்கள் வரிப் பணத்​தில் இருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியம் வழங்​கப்​படு​கிறது. கோயில் கணக்​குகளை தணிக்கை பார்க்க ரூ.228 கோடி செலவிடப்படுகிறது.

தனி மனிதர் தவறு செய்​தால் தண்டிக்​கும் நிலை​யில், அரசே குற்றமிழைக்​கும்​போது என்ன செய்​வது?. காவல்துறை மற்றும் முன்​னாள் ராணுவத்​தினரை இணைத்து கோயில் பாது​காப்பு படை உருவாக்​கப்​பட்​டது. ஆனால், 1022 உண்டியல் திருட்டு​கள், 248 கோயில்களில் சிலைகள் திருட்டு நடந்​துள்ளன. 500-க்​கும் மேற்​பட்ட விக்​ரகங்கள் திருடு​போ​யுள்ளன. இதுவரை எந்த குற்​ற​மும் கண்டு​பிடிக்க​வில்லை.

அறநிலையத்துறை கோயில் பணத்தை சூறை​யாடி வருகிறது. ஆகையால், இந்து சமய அறநிலையத் துறையை கலைத்துவிட வேண்​டும். அறநிலையத்துறை அறமற்ற துறையாக மாறியுள்ளது. கோயில் பாது​காப்புப் படையில் தற்போது முன்​னாள் போலீஸாரை சேர்க்​கிறார்​கள். அவர்கள் மது அருந்​தி​விட்டு பணியில் இருக்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

Read More : காதலியுடன் உல்லாசம்..!! வீடியோவை பார்த்த நண்பர்களுக்கு விபரீத ஆசை..!! தனியாக அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம்..!!

Tags :
அமைச்சர்இந்து சமய அறநிலையத்துறைசிலை கடத்தல் தடுப்புப் பிரிவுபொன்.மாணிக்கவேல்
Advertisement
Next Article