முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் மெட்டா.! Instagram, Threads சமூக வலைதளங்களில் அரசியல் பதிவுகளுக்கு தடையா.? விபரம் என்ன.!

05:19 PM Feb 10, 2024 IST | 1newsnationuser4
Advertisement

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு தேவையில்லாத அரசியல் ஊடகப்பதிவுகளால் இனி தொந்தரவு ஏற்படாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வசதியின் அடிப்படையில் இன்ஸ்டாகிராம் ஒரு பதிவை இடும் போது பயனர்கள் பின்பற்றாத அக்கவுண்டுகளில் இருக்கும் அரசியல் பதிவுகளை அவர்களுக்கு பரிந்துரைக்காது என மெட்ட அறிவித்துள்ளது.

Advertisement

இன்ஸ்டாகிராம் கடந்த வருடம் அறிமுகப்படுத்திய த்ரெட் செயலிக்கும் இந்த சேவை பொருந்தும் என அறிவித்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கவே நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் அரசியல் தொடர்புடைய ஒரு கணக்கை பின் தொடர விரும்பினால் உங்களது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் செயலி நீங்கள் பின் தொடராத கணக்குகளில் இருந்து அரசியல் குறித்த பதிவுகளை உங்களுக்கு பரிந்துரை செய்யாது என தெரிவித்துள்ளது.

அரசியல் தொடர்புடைய கண்டெண்டுகளை விரும்பும் நபர்களுக்காக அவை தொடர்புடைய பரிந்துரைகளை வழங்குவதற்கான வசதிகளை உருவாக்கும். மேலும் கட்டுப்பாடுகளின் படி இந்த வசதிகள் பேஸ்புக்கிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அரசியல் பதிவுகள் என்பவை தேர்தல் வாக்குப்பதிவு சமூக தலைப்புகள் மற்றும் சட்டங்கள் ஆகியவற்றை வரையறுக்கிறது.அரசியல் உள்ளடக்கத்துடன் தொடர்புகொள்வதைத் தேர்ந்தெடுக்கும் திறனைப் பாதுகாப்பதே எங்கள் குறிக்கோள், அதே நேரத்தில் ஒவ்வொரு தனிநபரின் ஆர்வத்தையும் நாம் மதிக்க வேண்டும்.என்று இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி த்ரெட்ஸில் பதிவிட்டுள்ளார்

அரசியல் பரிந்துரைக்கப்பட்ட கண்டண்டுகளை நிறுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட கொள்கை இன்ஸ்டாகிராம் செயலியின் ஆய்வு ரீல்ஸ், ஃபீட் போன்றவற்றின் பரிந்துரைகளுக்கும் பொருந்தும்.மெட்டா ஏற்கனவே பேஸ்புக் உட்பட அதன் சமூக பயன்பாடுகள் முழுவதும் அரசியல் உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. "அரசியல் உள்ளடக்கத்தை குறைவாகப் பார்க்க வேண்டும் என்று மக்கள் எங்களிடம் கூறியுள்ளனர், எனவே அரசியல் உள்ளடக்கத்தின் அளவைக் குறைக்க பேஸ்புக்கில் எங்கள் அணுகுமுறையைச் செம்மைப்படுத்த நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக செலவிட்டோம்.

இன்ஸ்டாகிராம் வலைப்பதிவில் உள்ள தொழில் முறை கணக்குகள் தங்களது பதிவுகள் பரிந்துரைக்கப்பட தயாரானதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம். மேலும் அவர்களது பதிவுகள் அரசியல் கண்டெண்டுகள் என்ற அடிப்படையில் பரிந்துரைகளில் இருந்து தடுக்கப்பட்டிருந்தால், பயனர் தனது பதிவுகள் குறித்த மதிப்பாய்வு மற்றும் மறு பதிவு செய்யும் வசதியையும் வழங்க இருக்கிறது.

Tags :
contentFacebookinstagramMetaPolitical postsThread
Advertisement
Next Article