முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோட்...! அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் ஆய்வு கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும்...!

06:50 AM Jan 03, 2024 IST | 1newsnationuser2
Advertisement

தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன‌.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் அல்லது தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000/- மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.02.2024. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
education departmenttn governmentதமிழக அரசு
Advertisement
Next Article