ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா தீ விபத்து!. காணாமல் போன மாலுமியின் உடல் மீட்பு!
INS Brahmaputra fire: ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின்போது மாயமான மாலுமி சிதேந்திர சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
மும்பை கடற்படை கப்பல் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா கப்பலில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை அணைக்கும் பணயில், மும்பை தீயணைப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. கடும் போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது. ஆனால், கப்பலில் இருந்த மாலுமிகளில் ஒருவர் காணாமல் போனார். இதையடுத்து, சக மாலுமிகள் மற்றும் தீயணைப்பு வீரர்களுகளும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு காணாமல் போன மாலுமி சீமான் சிதேந்திர சிங்கின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா கப்பலில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த சிதேந்திர சிங், ஏஜி எல்எஸ் (யுடபிள்யூ) ஆகியோருக்கு கடற்படைத் தலைமைத் தளபதி தினேஷ் கே திரிபாதி மற்றும் இந்திய கடற்படையின் அனைத்துப் பணியாளர்களும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்" என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, அதிகாரிகள் சிஎன்எஸ் தனது பயணத்தின் போது சேதத்தின் அளவைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தணிப்பு நடவடிக்கைகள், மீட்க திட்டமிடல் மற்றும் கப்பலின் செயல்பாட்டை சீக்கிரம் மீட்டெடுக்க பழுதுபார்ப்புகளை மேற்கொள்வது குறித்து விளக்கப்பட்டது.
ஐஎன்எஸ் பிரம்மபுத்ராவை கடற்பகுதியாக மாற்றுவதற்கும், போருக்குத் தயாரானதாக மாற்றுவதற்கும் கட்டளை மற்றும் கடற்படைத் தலைமையகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று சிஎன்எஸ் அறிவுறுத்தியுள்ளது என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். "இந்திய கடற்படையின் உண்மையான உணர்வில் கப்பலை விரைவாக இயக்குவதற்கு பணிபுரியுமாறு சிஎன்எஸ் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியது" என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
Readmore: இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.14 லட்சம் உறுதி..!! எத்தனை ஆண்டுகள்..? முழு விவரம் உள்ளே..!!