For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2024-25: ஐடிஆர்-ஐ சமர்ப்பித்த நபர்களுக்கு SMS & மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பப்படும்...!

Information will be sent via SMS & email to those who have submitted ITR.
08:21 AM Nov 20, 2024 IST | Vignesh
2024 25  ஐடிஆர் ஐ சமர்ப்பித்த நபர்களுக்கு sms  amp  மின்னஞ்சல் வழியாக தகவல் அனுப்பப்படும்
Advertisement

2024-25-ம் ஆண்டுக்கான ஐடிஆர்-ஐ ஏற்கனவே சமர்ப்பித்தவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வழியாக தகவல் செய்திகள் அனுப்பப்படும்.

Advertisement

மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வரி செலுத்துவோருக்கு வெளிநாட்டு சொத்துக்களை துல்லியமாக பூர்த்தி செய்வதற்கும், வெளிநாட்டு ஆதாரங்களிலிருந்து வரும் வருமானத்தை அவர்களின் வருமான வரி படிவத்தில் பதிவிடுவதற்கு உதவுவதற்காக 2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான, விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

கருப்புப் பணம் (வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள்) மற்றும் வரி விதிப்பு சட்டம், 2015 -ன் கீழ், வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வருமானத்தை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் (அட்டவணை எஃப்ஏ மற்றும் எஃப்எஸ்ஐ) என்ற விதிமுறைக்கு இணங்குவது கட்டாயமாகும். இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 2024-25-ம் ஆண்டுக்கான ஐடிஆர்-ஐ ஏற்கனவே சமர்ப்பித்தவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வழியாக தகவல் செய்திகள் அனுப்பப்படும்.

இந்த செய்திகள் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் மூலம் அடையாளம் காணப்பட்ட தனிநபர்களுக்கானவை. அவர்கள் வெளிநாட்டு கணக்குகள் அல்லது சொத்துக்களை வைத்திருக்கலாம் அல்லது வெளிநாட்டு அதிகார வரம்புகளிலிருந்து வருமானத்தைப் பெற்றிருக்கலாம் என்று பரிந்துரைக்கின்றன. 2024-25- க்கான சமர்ப்பிக்கப்பட்ட ஐடிஆர்-ல் அட்டவணை வெளிநாட்டு சொத்துக்களை முழுமையாக பூர்த்தி செய்யாதவர்களுக்கு நினைவூட்டுவதும் வழிகாட்டுவதும் இதன் நோக்கமாகும்.

தகுதியுள்ள அனைத்து வரி செலுத்துவோரும் தங்கள் வரி பொறுப்புகளை நிறைவேற்றவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் எதிர்பார்க்கிறது. இந்த முயற்சி வளர்ந்த இந்தியாவுக்கான அரசின் பார்வைக்கு ஏற்ப இருப்பது மட்டுமல்லாமல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தன்னார்வ இணக்கம் ஆகியவற்றின் கலாச்சாரத்தையும் வளர்க்கிறது.

Tags :
Advertisement