For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடி தூள்...! இனி SMS மூலம் தகவல்.. பத்திரப்பதிவில் அதிரடி மாற்றம்...!

Information through SMS now. Action change in deed registration
06:45 AM Jun 09, 2024 IST | Vignesh
அடி தூள்     இனி sms மூலம் தகவல்   பத்திரப்பதிவில் அதிரடி மாற்றம்
Advertisement

பத்திர பதிவுக்குப்பின் இணைய வழியில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பபடும்.

Advertisement

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; 2024 ஜூன் திங்கள் 15-ம் நாள் முதல் 100% தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கினை அடைய கீழ்கண்ட நெறிமுறைகளை கடைபிடித்திட வேண்டும்.

அதன் படி, பத்திர பதிவுக்கு பின்பு இணையவழியில் மேற்கொள்ளப்படும் பட்டா மாறுதல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட நில அளவர்கள்" / கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரிடம் இருந்து குறுஞ்செய்தி (SMS) வாயிலாக கிரையம் கொடுப்பவர் மற்றும் பெறுபவர் இருவருக்கும் தெரிவிக்கப்படும். உட்பிரிவு செய்ய அவசியம் இல்லாத நிலகிரயங்களில் பதிவு செய்யப்பட்ட உடனேயே பட்டா தானியங்கியாக மாற்றப்படும்.

கிரயம் மற்றும் உரிமை மாற்றம் செய்யும் நபர் பெயரில் பட்டா இருப்பதை தவறாமல் உறுதி செய்து கொள்ள வேண்டும். கிரயம் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்படும் சொத்து விபரமும் அளவுகளும், வருவாய்துறை நடப்பு சான்றுகளுடன் ஒத்திருப்பதை உறுதி செய்து கொண்டு அதன்படி ஆவணம் தயாரிக்க வேண்டும்.

முன் ஆவண சொத்து இதர விபரங்களை சரிபார்த்து ஆவணம் தயாரிக்க வேண்டும். சொத்து வரி மின் கட்டண ரசீது, தண்ணீர் வரி ரசீது வரிவிதிப்பு பெயர்களை சரிபார்த்து ஆவணம் தயாரித்தல், இறந்தவர் பெயரில் பட்டா இருப்பின் பட்டாவில் வாரிசுகள் பெயரை சேர்த்த பின் ஆவணம் தயாரித்து வழங்க‌ வேண்டும். கூட்டு பட்டாவை தனிப்பட்டாவாக மாற்றியபின் ஆவணம் தயாரித்து வழங்க‌ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement