முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அடி தூள்...! கூட்டுறவு சங்கத்தில் தனி நபர் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு...! தமிழக அரசு அறிவிப்பு

Individual loan limit in cooperative societies increased to Rs. 20 lakhs
05:51 AM Dec 05, 2024 IST | Vignesh
Advertisement

தமிழகத்திலுள்ள பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பினை ரூ.15 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தி வழங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் ; சில பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களாலும், சில மண்டல இணைப்பதிவாளர்களாலும், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க ஊழியர் சங்கங்களாலும், பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ரூ.15/- இலட்சத்திலிருந்து ரூ.20/- இலட்சமாக உயர்த்தி வழங்கிடக் கோரிக்கைகள் பெறப்பட்டதைத் தொடர்ந்து பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ரூ.15/- இலட்சத்திலிருந்து ரூ.20/- இலட்சமாக கீழ்கண்ட நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்த்தி வழங்கிட அனுமதிக்கப்படுகிறது.

கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக் காலம் 120 மாதங்களுக்குட்பட்டு இருத்தல் வேண்டும். உறுப்பினர்களின் வயது வரம்பினையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதிகபட்சக் கடன் அளவு ரூ.20/- (இருபது) இலட்சம் அல்லது உறுப்பினர் பெறும் மொத்த சம்பளத்தில் 25 மடங்கு இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்பட வேண்டும். உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 5% பங்குத் தொகையாக வசூலிக்கப்பட வேண்டும்.

பணியாளர்களின் மொத்த ஊதியத்திலிருந்து அனைத்து பிடித்தங்களும் மேற்கொள்ளப்பட்டு பணியாளர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் அவருடைய மொத்த ஊதியத்தில் 25%-க்குக் குறைவாக இருக்கக் கூடாது. பணியாளர்கள் பணிபுரியும் அலுவலக சம்பளம் வழங்கும் அலுவலர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட பிறகு கடன் தொகை அனுமதிக்கப்பட வேண்டும். பணியாளர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் சங்கத்தின் நிதிநிலைமையைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட சாகத் துணைப்பதிவாளரிடம் தக்க துணை விதிக்கிருத்தங்கள் மேற்கொண்டு பதிவு செய்த பின்னரே புதிய உச்ச வரம்பின் அடிப்படையில் கடன் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiTamilnadutn governmentசென்னைதமிழ்நாடுதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article