முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அசத்திய இந்தியா.... உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ருத்ராஎம்-II ஏவுகணை சோதனை வெற்றி...!

09:11 AM May 30, 2024 IST | Vignesh
Advertisement

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ, மே 29 அன்று ஒடிசா கடற்கரையில் இந்திய விமானப் படையின் சுகோய்-30 எம்கே-I விமானத்தில் இருந்து தரையில் உள்ள இலக்கை குறிவைத்து ஏவப்படும் ருத்ராஎம்-II - ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்தச் சோதனை, அதன் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்தது.

Advertisement

ருத்ராஎம்-II - என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட-உந்துதல் ஏவுகணை அமைப்பாகும். இது பல வகையான எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. டிஆர்டிஓ ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட பல அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பங்கள் ஏவுகணை அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ருத்ராஎம்-II-ன் வெற்றிகரமான சோதனைக்காக டிஆர்டிஓ, இந்திய விமானப்படை ஆகியவற்றுக்கு வாழ்த்து தெரிவித்தார். வெற்றிகரமான சோதனையானது, ஆயுதப் படைகளுக்கு வலுசேர்க்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags :
missileodishaRudram 2
Advertisement
Next Article