For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 62.42 பில்லியன் டாலர்...!

India's total exports last July were $62.42 billion
10:05 AM Aug 16, 2024 IST | Vignesh
கடந்த ஜூலை மாதம் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 62 42 பில்லியன் டாலர்
Advertisement

ஜூலை 2024-க்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 62.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஜூலை 2023 உடன் ஒப்பிடும்போது 2.81 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது. ஜூலை 2024-க்கான மொத்த இறக்குமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 72.03 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஜூலை 2023 உடன் ஒப்பிடும்போது 7.14 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.

Advertisement

ஏப்ரல்-ஜூலை 2024 காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 261.47 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 6.65 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது. ஏப்ரல்-ஜூலை 2024 காலகட்டத்தில் மொத்த இறக்குமதி 292.64 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 7.30 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.

ஜூலை 2023-ல் 34.49 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் ஜூலை 2024-ல் வணிக ஏற்றுமதி 33.98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2023 ஜூலையில் 53.49 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 2024 ஜூலையில் வணிக இறக்குமதி 57.48 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

Tags :
Advertisement