முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்தியாவின் அடுத்த நிலவு பயணம்!… சந்திரயான்-4 அப்டேட்!

08:53 AM Apr 13, 2024 IST | Kokila
Advertisement

Chandrayaan-4: இந்திய விண்வெளி நிறுவனமான ISRO, தனது அடுத்த நிலவு பயணமான சந்திரயான்-4க்கு தயாராகி வருகிறது.

Advertisement

கடந்த ஆண்டு இஸ்ரோவின் முயற்சியால் சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சாதனை படைத்தது. இதையடுத்து சந்திரயான்-4 தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-4 தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து சில மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் எனவும் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா) அழைக்கப்படும் என கூறியுள்ளார்.

சந்திரயானின் முதல் பாகமான புரொபஷனல் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சென்றவுடன், அது சந்திரனை நோக்கி பயணிக்க உதவும். அடுத்த கட்டமான டிசென்டர் நிலவில் தரை இறங்குவதற்காக உதவும். பின்னர் அதிலிருந்து வெளியே வரும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேமித்து, பூமிக்கு அனுப்பும் என கூறியுள்ளார்.

மேலும் சந்திரயான்-4 (Chandrayaan-4) தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி சந்திரயான் 4 திட்டம் 2040 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தென் துருவத்தில் தரையிறக்கப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Readmore: ”எல்லாம் Election முடியுற வரைக்கும்தான்”..!! பொதுமக்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!!

Advertisement
Next Article