முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Index: இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 3.8% வளர்ச்சி...! மத்திய அரசு தகவல்...!

08:53 AM Mar 13, 2024 IST | 1newsnationuser2
Advertisement

2024 ஜனவரியில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 3.8% வளர்ச்சி.

Advertisement

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டெண்ணின் விரைவு மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதமும் 12-ம் தேதி (அல்லது 12 ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தால் முந்தைய வேலை நாள்) ஆறு வார கால தாமதத்துடன் வெளியிடப்படுகின்றன, மேலும் மூல முகமை களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் தொகுக்கப்படுகின்றன, அவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் / நிறுவனங்களிடமிருந்து தரவைப் பெறுகின்றன.

2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவான மதிப்பீடுகள் 153.0 ஆக உள்ளது. ஜனவரி மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தியின் குறியீடுகள் முறையே 144.1, 150.1 மற்றும் 197.1 ஆக உள்ளன. தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.

பயன்பாடு அடிப்படையிலான வகைப்பாட்டின்படி, ஜனவரி மாதத்தில் முதன்மை பொருட்களுக்கு 154.2, மூலதன பொருட்களுக்கு 109.2, இடைநிலை பொருட்களுக்கு 163.0 மற்றும் உள்கட்டமைப்பு / கட்டுமான பொருட்களுக்கு 185.0 குறியீடுகள் உள்ளன. மேலும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத நீடித்த பொருட்களுக்கான குறியீடுகள் ஜனவரி மாதத்தில் முறையே 120.7 மற்றும் 163.9 ஆக உள்ளன.

Advertisement
Next Article