பாகிஸ்தான் உடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபடாது.!! - ஜெய்சங்கர் திட்டவட்டம்
எல்லையில் அமைதியை ஏற்படுத்தப் பாகிஸ்தான் உடன் இனி இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல காலங்களாக மோதல் நிலவி வருகிறது. .
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "இங்கே பிரச்சினை என்னவென்றால் பாகிஸ்தானுடன் என்ன வகையான உறவு என்பதிலேயே குழப்பம் இருக்கிறது. தற்போது இருப்பது போலவே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இருக்க வேண்டும் என்று இந்தியா நினைக்கிறதா என்று நீங்கள் கேட்டால்.. அதற்கு ஆம், இல்லை என இரண்டு பதிலும் பொருந்தும்.
அதற்காக இந்தியா என்ன நடந்தாலும் அமைதியாக இருக்கும் என நான் சொல்லவில்லை. பாசிட்டிவாகவே இல்லை நெகடிவ்வாகவோ எப்படி இருந்தாலும் நாங்கல் எதிர்வினையாற்றுவோம்" என்றார். அதாவது என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்திய சகாப்தம் முடிந்துவிட்டதாகவும் எல்லையில் இருக்கும் சூழலுக்கு ஏற்ப தக்க பதிலடியை இந்தியா தரும் என்பதே ஜெய்சங்கர் பதிலாக இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் எல்லை மோதல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே நாம் விடுதலை பெற்ற போதில் இருந்தே மோதல் நிலவி வருகிறது. அதேநேரம் இந்தியாவுக்குள் பயங்கரவாத செயல்களைப் பாகிஸ்தான் நடத்தியும் பயங்கரவாத செயல்களை ஊக்குவித்தும் வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
Read more ; பூதாகாரமாய் வெடித்த சிவாஜி சிலை விவகாரம்.. மன்னிப்பு கோரினார் பிரதமர் மோடி..!!