For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் கொலைக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமா...? ஜெய்சங்கர் பதில்

03:04 PM May 05, 2024 IST | Vignesh
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் கொலைக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமா     ஜெய்சங்கர் பதில்
Advertisement

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஜெய்சங்கர் கூறினார்

Advertisement

காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரைக் கொன்றதாகக் கைது செய்து குற்றம் சாட்டப்பட்ட மூன்று இந்தியர்கள் பற்றிய தகவல்களை கனடா காவல்துறை பகிர்ந்து கொள்ளும் வரை இந்தியா காத்திருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இந்திய அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருவதாகக் கூறி, நிஜ்ஜார் கொலை தொடர்பாக மூன்று பேர் மீதும் கனடா போலீஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்டூரோ "கனடா நாடு சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு. நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கான அடிப்படை அர்ப்பணிப்பு கொண்டுள்ள நாடு என தெரிவித்தார். நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது. கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.

இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர்கள் இந்தியர்கள் என்று தெரிகிறது... காவல்துறை எங்களிடம் சொல்லும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும் நிலை உள்ளதாக கூறினார். அவர்கள் இந்தியாவில் இருந்து, குறிப்பாக பஞ்சாபிலிருந்து, கனடாவில் செயல்படுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை அனுமதித்துள்ளனர். தேர்தல் நடைபெற உள்ள கனடாவில் இப்போது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் உள்நாட்டு அரசியல். இந்த கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஜெய்சங்கர் கூறினார்.

Advertisement