முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி வெற்றி!. பரிசுத் தொகை அறிவிப்பு!. எவ்வளவு தெரியுமா?

India's ACT triumph: Hockey India announces cash prize of Rs 3 lakh for each player
07:22 AM Sep 18, 2024 IST | Kokila
Advertisement

India's ACT triumph: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த இந்தியா 5வது முறையாக கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. பரபரப்பான பைனலில் நேற்று சீனாவுடன் மோதிய இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. முதல் முறையாக பைனலில் விளையாடிய சீன வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தியதால் முதல் 3 கால் மணி நேர ஆட்டத்திலும் கோல் ஏதும் விழாமல் 0-0 என இழுபறி நீடித்தது. கடைசி கட்டத்தில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணிக்கு ஜுக்ராஜ் சிங் அற்புதமான ஃபீல்டு கோல் அடித்து வெற்றிக்கு உதவினார் (51வது நிமிடம்). முன்னதாக, 3வது இடத்துக்கு நடந்த மோதலில் பாகிஸ்தான் 5-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

Advertisement

இதுவரை நடந்துள்ள 8 தொடரில் இந்தியா 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. தொடர்ந்து 2வது முறையாக இந்தியா கோப்பையை தக்கவைத்துள்ளது. ஏற்கனவே 2016ல் மலேசியாவில் நடந்த போட்டியில் கோப்பையை வென்ற இந்தியா 2018ல் (ஓமன்) பாகிஸ்தானுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது. சென்னையில் கடந்த ஆண்டு நடந்த 7வது தொடரில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இப்போட்டி நடந்தது. 6 முறை பைனலில் விளையாடிய இந்தியா 5 முறை பட்டம் வென்றுள்ளது.

லீக் சுற்றில் சீனாவுக்கு எதிராக முதல் கோல் போட்ட ஜுக்ராஜ், பைனலிலும் வெற்றி கோல் போட்டு அசத்தினார். அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜிவூன் யாங் (9 கோல், கொரியா), இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (7 கோல்) முதல் 2 இடங்களை பிடித்தனர்.இந்த தொடரில் இந்தியா மொத்தம் 26 கோல் போட்டது (18 ஃபீல்டு கோல்). எதிராக 5 கோல் மட்டுமே அடிக்கப்பட்டன. இந்திய அணியின் முயற்சிகளுக்கு வெகுமதி அளிக்கும் வகையில், ஹாக்கி இந்தியா ஒவ்வொரு வீரருக்கும் ரூ.3 லட்சமும், துணைப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1.5 லட்சமும் ரொக்கப் பரிசாக அறிவித்துள்ளது.

Readmore: அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்!. புதிய PPF விதிகள் இதோ!

Tags :
cash prize of Rs 3 lakheach playerHockey India announcesIndia's ACT triumph
Advertisement
Next Article