For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Indians Trapped in War Zone | உக்ரைனுக்கு எதிராக போரிட மிரட்டும் ரஷ்யா..!! சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்..!!

01:45 PM Feb 21, 2024 IST | 1newsnationuser6
indians trapped in war zone   உக்ரைனுக்கு எதிராக போரிட மிரட்டும் ரஷ்யா     சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்
Advertisement

Indians Trapped in War Zone | ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கியது. இதில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அங்கம் வகித்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் சிலர் எல்லையில் போரிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள். ஆயுதம் மற்றும் வெடிமருந்து பயன்பாடு குறித்த அடிப்படை பயிற்சியை ரஷ்ய ராணுவம் தங்களுக்கு வழங்கி, உக்ரைன் நாட்டை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியான Rostov-on-Don பகுதியில் உள்ள முகாமில் கடந்த ஜனவரி மாதம் முதல் பணியமர்த்தி உள்ளதாக பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

2023 நவம்பரில் ரஷ்யா சென்ற இந்தியர்கள் ராணுவ உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாதந்தோறும் ரூ.1.95 லட்சம் ஊதியம் மற்றும் ரூ.50,000 போனஸ் என அவர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், முதல் இரண்டு மாதத்துக்கான ரூ.50,000 போனஸ் மட்டும் அவர்கள் பெற்றுள்ளனர். ‘பாபா வி-லாக்ஸ்’ எனும் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஃபைசல் கான் மூலம் அவர்கள் ரஷ்யா வந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து சுமார் இரண்டரை மணி நேர பயணத்துக்கு பிறகு ராணுவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உதவியாளர்களாக தான் பணி என இந்திய முகவர்கள் அவர்களிடத்தில் உறுதி அளித்துள்ளனர். அங்கு தங்கியிருந்த அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனவரி 4ஆம் தேதி அன்று அவர்கள் எல்லைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அப்போது முதல் அவர்கள் அங்கேயே இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “5 மீட்டர் இடைவெளி விட்டு நடந்தால் குண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என ராணுவ அதிகாரி சொல்வார். நாங்களும் அப்படியே நடந்தோம். எங்களுக்கு வழிகாட்டியாக வந்த உள்ளூரை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த ஜனவரி 22ஆம் தேதி யுத்தக் களத்தில் இருந்து தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். உதவிக்காக இந்திய தூதரகத்தை அணுகினாலும் பலன் இல்லை” என பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

English Summary : Indians hired as ‘helpers’ forced to fight in Russia’s war

Read More : Vanitha Vijaykumar | திருமணத்திற்கு அழைக்காததால் ஆத்திரம்..!! தங்கை குறித்து வனிதா விஜயகுமார் சொன்ன பகீர் தகவல்..!!

Advertisement