இந்தியர்கள் இருவர் பலி எதிரொலி!. ராணுவ ஆட்சேர்ப்பை நிறுத்துங்கள்!… ரஷ்யாவிற்கு இந்தியா கோரிக்கை!
India Demands Russia: ரஷ்யா - உக்ரைன் போரின்போது 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதன் எதிரொலியை அடுத்து ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுடனான போரி போது ரஷ்ய இராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இந்தநிலையில், ரஷ்யாவின் இத்தகைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. ஏனெனில் இதுபோன்ற செயல்பாடுகள் எங்கள் கூட்டாண்மைக்கு இணக்கமாக இருக்காது என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் ரஷ்ய ராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இரண்டு இந்தியர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டதற்கு வருத்தம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது. மேலும், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் இரண்டு இந்தியர்களின் உடல்களையும் முன்கூட்டியே திருப்பி அனுப்புமாறு பாதுகாப்பு அமைச்சகம் உட்பட ரஷ்ய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2 இந்தியர்களை பலியானதையடுத்து, ரஷ்யாவில் வேலை வாய்ப்புகளைத் தேடும் போது இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
Readmore: ஜூலை 1ல் மோடி 3.0 மெகா பட்ஜெட் 2024-25!. எந்தப் பங்குகளை வாங்கலாம்?. அடுத்த 5 ஆண்டுகளுக்கான இலக்கு!.