மக்களே.. இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை..!! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஆறு மாதங்களுக்கு தீவு நாட்டிற்குச் செல்ல விசா இல்லாத அணுகலை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுற்றுலா அமைச்சகத்தின் ஆலோசகர் ஹரின் பெர்னாண்டோ கூறினார். இது ஆறு மாதங்கள் மட்டும் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பட்டியலில் உள்ள நாடுகளில் இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சவுதி அரேபியா, யுஏஇ, நேபாளம், இந்தோனேசியா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், தென் கொரியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் மற்றும் நியூசிலாந்து, தாய்லாந்து ஆகியவை அடங்கும்.
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 35 நாடுகளுக்கு இலவச விசா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விசா இல்லாமல் 60 நாட்களுக்கு தங்கலாம். மேலும், மேலும் சுற்றுலா பயணிகள் குற்ற பின்னணியில் சம்பந்தம் உடையவர்களா என சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Read more ; ZOHO -வில் வேலை வேண்டுமா? வந்தாச்சு புதிய அறிவிப்பு..!! சென்னையில் பணி.. மிஸ் பண்ணிடாதீங்க!!