For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"செல்போன்களை அடிக்கடி எடுத்துப் பார்ப்பது இந்தியர்களின் வழக்கமாக இருக்கிறது.." 'BCG' அறிக்கை.!

08:56 PM Feb 12, 2024 IST | 1newsnationuser7
 செல்போன்களை அடிக்கடி எடுத்துப் பார்ப்பது இந்தியர்களின் வழக்கமாக இருக்கிறது     bcg  அறிக்கை
Advertisement

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி தங்கள் செல்போன்களை கைகளில் எடுத்து பார்ப்பதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதில் பெரும்பாலானவர்களுக்கு ஏன் செல்போனை கையில் எடுத்தோம் என்று தெரியவில்லை எனவும் அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. இதனை அவர்கள் தங்கள் பழக்கத்தின் காரணமாக செய்வதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவுகளை உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிக்கையின் படி ஒரு வழக்கமான ஸ்மார்ட்போன் பயனர் ஒரு நாளைக்கு 70-80 முறை ஃபோனை தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களை கைகளில் எடுப்பதாக தெரிவிக்கிறது.

Advertisement

கஸ்டமர் இன்சைட்ஸ் இந்தியா மையத்தின் தலைவர் கனிகா சங்கி கூறுகையில், "எங்கள் ஆராய்ச்சியில் பயனர்களுக்கு பாதி நேரம் ஏன் செல்போனை கையில் இருக்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவாக தெரிவதில்லை. அவர்கள் இதை வழக்கத்திற்கு மாறாக செய்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோரிடமிருந்து பெறப்பட்ட தெளிவான தரவுகள் மற்றும் நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் 45 முதல் 50 சதவீத நேரம் அவர்கள் செய்ய வேண்டிய பணி மற்றும் முடிக்க வேண்டிய வேலை குறித்த தெளிவு இருந்திருக்கிறது. 5 முதல் 10 சதவீத நேரம் ஓரளவு தெளிவுடன் இருந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.

BCGயின் மூத்த பங்குதாரரும் நிர்வாக இயக்குநருமான நிமிஷா ஜெயின் கூறுகையில் " ஸ்மார்ட் ஃபோன்களில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. செல்போன்களில் பயன்படுத்தப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மற்றும் ஜெனரேட்டிவ் 'AI' போன்றவை பற்றி மீடியாக்களில் நடைபெறும் விவாதங்கள் இதற்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் வீடியோ தொடர்புடைய கண்டண்டுகளை பார்ப்பதை விரும்புவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் அவர்களது நேரத்தில் 50-55 சதவீதம் வீடியோ ஆப்களிலும் செல்போன் அழைப்பு மற்றும் மெசேஜ் ஷாப்பிங் பயணங்கள் மற்றும் கேமிங் போன்றவற்றில் செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement