For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

UAE-ல் செயல்பாட்டிற்கு வந்த UPI பணப் பரிவர்த்தனை!! இது எவ்வாறு செயல்படுகிறது?

The Indian government is introducing UPI service in the UAE market. NPCI International Payments Limited has recently collaborated with Network International, a major digital commerce company in Africa and the Middle East, to facilitate the services
04:34 PM Jul 04, 2024 IST | Mari Thangam
uae ல் செயல்பாட்டிற்கு வந்த upi பணப் பரிவர்த்தனை   இது எவ்வாறு செயல்படுகிறது
Advertisement

மத்திய கிழக்கு நாடுகளில் யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement

என்பிசிஐ தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் யுபிஐ செயலிகள் மூலம் 1,390 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் 49 சதவிகிதம் அதிகரித்து கொண்டுள்ளது. யுபிஐ செயலிகளை உலகளவில் ஊக்குவிக்கும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து இந்திய ரிசர்வ் வங்கியும், என்பிசிஐயும் செய்து வருகின்றன. இந்த காலகட்டத்தில் மட்டும் யுபிஐ செயலிகள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 46.3 கோடி பரிவர்த்தனைகளில் ரூ. 66,903 கோடி மதிப்பிலான தொகை பகிரப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக நெட்வொர்க் இண்டர்நேஷனல் என்ற வர்த்தக நிறுவனத்துடன் என்பிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்பவர்கள் அல்லது அங்கு வசிக்கும் இந்தியர்கள், யுபிஐ செயலிகள் மூலம் 'க்யூ-ஆர் கோடை' ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

ஏற்கெனவே நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ், பூடான் மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் யுபிஐ அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது, மத்திய கிழக்கு நாடுகளிலும் யூபிஐ பண பரிவர்தனை கொண்டு வரப்படுகிறது. இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தாண்டும் மட்டும் 98 லட்சம் பேருக்கு மேல் அந்த நாடுகளுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், அமீரகத்துக்கு மட்டும் 53 லட்சம் இந்தியர்கள் பயணிக்கவுள்ளனர். யுபிஐ பணப்பரிவர்த்தனை அதிகரித்து கொண்டிருப்பதன் காரணமாக யுபிஐயுடன் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைக்கும் பணிகள் வெளிநாடுகளிலும் தொடங்கியுள்ளன.

Tags :
Advertisement