இந்திய விளையாட்டுப் பொருட்கள் ஏற்றுமதியில் 239% அதிகரிப்பு...!
2022-23-ம் நிதியாண்டில் இந்திய விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறை இறக்குமதியில் 52% சரிவையும், ஏற்றுமதியில் 239% அதிகரிப்பையும் கண்டுள்ளது.
2014-15-ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2022-23-ம் நிதியாண்டில் இந்திய விளையாட்டுப்பொருட்கள் தொழில் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இறக்குமதி 52% குறைந்து, ஏற்றுமதி 239% அதிகரித்துள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் உத்தரவின் பேரில் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் நடத்திய "இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களின் வெற்றிக் கதை" குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அரசின் முயற்சிகள் இந்திய விளையாட்டுப்பொருட்கள் தொழில் துறைக்கு மிகவும் உகந்த உற்பத்தி சூழலை உருவாக்க வழிவகுத்துள்ளன என்று அறிக்கை கூறுகிறது. 2014 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில், இந்த அர்ப்பணிப்பு முயற்சிகள் உற்பத்தி அலகுகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கும், இறக்குமதியை 33% இருந்து 12% ஆகக் குறைப்பதற்கும், மொத்த விற்பனை மதிப்பை 10% அதிகரிப்பதற்கும், தொழிலாளர் உற்பத்தித்திறனில் ஒட்டுமொத்த உயர்வுக்கும் வழிவகுத்துள்ளன