முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி!… மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியில் அசத்தல்!

06:41 AM Nov 05, 2023 IST | 1newsnationuser3
Advertisement

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகளிருக்கான 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்த ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 5ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த ஹாக்கி தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன. ஆசிய சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பாக செயல்பட்டு தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது.

அந்தவகையில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான தென் கொரியா அணியை எதிர்கொண்டது. இதில், சலிமா மற்றும் வைஷ்ணவி வி பால்கே ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து இந்திய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற செய்தனர். இந்த போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து, இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஜப்பானை மீண்டும் எதிர்கொள்கியது இந்திய மகளிர் அணி.

Tags :
Women's Asian Champions Hockeyஇந்திய மகளிர் அணிமகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி
Advertisement
Next Article