முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

T20 World Cup ; ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

05:45 PM Apr 30, 2024 IST | Mari Thangam
Advertisement

டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

Advertisement

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள 20 அணிகளும், 15 பேர் கொண்ட அணியை மே 1-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவுறுத்தியது. ஒவ்வொரு நாடுகளும் போட்டிக்கான தங்கள் அணிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

முதல் கட்டமாக இந்த தொடரில் பங்கேற்கும் கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது 2ஆவது அணியாக பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. இதில், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலில், ரோகித் ஷர்மா (C), விராட் கோலி, யஜஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (VC), ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்த்ரா சாஹல், அர்ஷ்தீப் சிங்,ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாற்று வீரர்களாக கில், ரிங்கு சிங்,கலீல் அகமது, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இந்திய அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறாதது அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Next Article