நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்.!! அமெரிக்காவில் 'இந்திய மாணவர்' கொடூர கொலை.! சாலையோர மனிதன் வெறி செயல்.!
அமெரிக்காவில் 25 வயது விவேக் சைனி என்கிற இந்திய மாணவர், வீடற்ற ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கலங்கடிக்கிறது.
அமெரிக்காவின், ஜார்ஜியாவில் உள்ள லித்தோனியாவுக்கு, இந்தியாவின் ஹரியானாவை சேர்ந்த, 25 வயது மாணவர் விவேக் சைனி, முதுகலை பட்டப் படிப்பிற்காக சென்றார். எம்பிஏ மாணவரான இவர், அங்கு உள்ள ஒரு கடையில் பகுதி நேர எழுத்தராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்த சம்பவம் ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்றுள்ளது. வீடற்று, போதைக்கு அடிமையான ஜூலியன் பால்க்னர் என்பவருக்கு கடந்த சில தினங்களாக விவேக் சைனி உதவியுள்ளார். சிப்ஸ் கோக், தண்ணீர் மற்றும் குளிரைத் தணிக்க ஒரு ஜாக்கெட் என்று அனைத்தையும் கொடுத்து பால்கருக்கு, விவேக் சைனி உதவியுள்ளார். மேலும் இரண்டு நாட்களாக கடைக்குள் தங்குவதற்கும் அனுமதித்துள்ளார்.
ஜனவரி 16ஆம் தேதி இரவு, விவேக் கடையை விட்டு வெளியேறும்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக பால்க்கரை கடையின் வளாகத்தை விட்டு வெளியேறுமாறும், மறுத்தால் காவல்துறையை நாடப்போவதாகவும் கூறினார். ஆனால் சற்றும் கருணை இல்லாமல் பால்கர், விவேக் சைனியை சுத்தியலைக் கொண்டு தலையில் கொடூரமாக தாக்கினார். விவேக் சைனி அலறித் துடித்த போதும், நிறுத்தாமல் 50 முறைக்கும் மேல் தாக்கி சம்பவ இடத்திலேயே அவரது உயிரைப் பறித்தார்.
போலீசார் அந்த இடத்திற்கு செல்லும் போது, சைனியின் உயிரற்ற உடலின் அருகே பால்கர் நின்றிருந்தார். இந்த கொடூர சம்பவம் இடம்பெற்ற காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இது பார்ப்பவர்களை மிரட்சியில் ஆழ்த்துகிறது. விவேக் சைனியின் குடும்பம் ஹரியானாவில் மீளாத் துயரில் மூழ்கியது.