அமெரிக்கா | 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இந்திய மாணவனுக்கு 12 ஆண்டுகள் சிறை..!!
அமெரிக்காவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இந்திய மாணவனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் உபேந்திரா அடுரு (32). இவர் மாணவர் விசா மூலம் அமெரிக்கா வந்தார். சமூக வலைதளங்களில் 13 வயது சிறுமியாக தன்னை காட்டிக்கொண்டு, ஒரு துப்பறியும் நபருடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டார். சமூக ஊடகத்தில் 13 வயது சிறுமியிடம் உடலுறவு கொள்ள விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த சிறுமிக்கு ஆபாச புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.
அடுருவும் பலமுறை அந்தப் பெண்ணைச் சந்திக்க முயன்றார், இறுதியில் அந்தப் பெண்ணுடன் ஒரு சந்திப்பை அமைத்த பிறகு மில்க்ரீக் டவுன்ஷிப்பில் உள்ள பூங்காவிற்குச் சென்றார். சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற போது போலீசார் அவரை கைது செய்தனர். அவரின் செல்போனை சோதித்து பார்த்ததில், குழந்தைகளை சட்ட விரோதமாக கடத்தி, பாலியில் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல் என்பதை கண்டறிந்தனர்.
Read more ; கன்வார் யாத்திரை : உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை..!!