For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Blue Whale Challenge | அமெரிக்காவில் இந்திய மாணவன் பலி.!! உயிரைக் குடித்த தற்கொலை விளையாட்டு.!!

02:53 PM Apr 20, 2024 IST | Mohisha
blue whale challenge   அமெரிக்காவில் இந்திய மாணவன் பலி    உயிரைக் குடித்த தற்கொலை விளையாட்டு
Advertisement

Blue Whale Challenge: அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு துயரமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த முதலாம் ஆண்டு மாணவர் கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ப்ளூவேல் சேலஞ்ச் என்று அழைக்கப்படும் கொடூரமான தற்கொலை விளையாட்டால் அந்த மாணவர் இறந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இறந்த மாணவரின் குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயரை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் கடந்த மார்ச் 8-ஆம் தேதி அவரது அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இந்திய மாணவரின் இறப்பு தொடர்பாக பேசிய பிரிஸ்டல் கவுண்டி மாவட்ட வழக்கறிஞரின் செய்தித் தொடர்பாளர் கிரெக் மிலியோட் " இந்த மாணவரின் வழக்கு வெளிப்படையான தற்கொலையாக விசாரிக்கப்படுகிறது. முதலில் அந்த மாணவர் கொலை செய்யப்பட்டார் என்று பரவலாக புகார் அளிக்கப்பட்டது. அந்த மாணவர் முதலில் தவறாக அடையாளம் காணப்பட்டு அவர் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பின்னர் காரில் இருந்து பிணமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பாஸ்டன் குளோப் நாளிதழ் அந்த மாணவரின் பெயரை அடையாளம் காட்டியது என்று கூறினார்.

அந்த மாணவரின் குடும்பத்தினரின் விருப்பப்படி அவரது பெயரை வெளியிட ஏஜென்சி மறுத்துவிட்டது. எனினும் அந்த மாணவர் இறப்பிற்கான காரணம் தற்கொலை என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பதின்ம வயதினரையும் இளைஞர்களையும் இரையாக்கும் இந்த ஆபத்தான விளையாட்டை விளையாடி அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பெற்றோருக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அறிவிக்கப்பட வேண்டும்.

ப்ளூவேல்(Blue Whale Challenge) தற்கொலை விளையாட்டில் இறந்த இந்திய மாணவருக்கு 2 நிமிடங்கள் மூச்சு விடாமல் இருக்க வேண்டும் என்பது சவாலாக கொடுக்கப்பட்டிருந்தது என அதிகாரப்பூர்வ விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ளூவேல் விளையாட்டில் இந்தியாவிற்கு இது முதல் மரணமாக இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசாங்கம் இந்த விளையாட்டை தடை செய்ய முடிவு செய்தது. ஆனால் அதற்கு பதிலாக விரிவான ஆலோசனைக்கு உத்தரவிட்டது . ப்ளூ வேல் விளையாட்டு தற்கொலைக்கு தூண்டுகிறது என இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவுரையில் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளங்களில் கிடைத்துள்ள தகவல்களின்படி ப்ளூ வேல் விளையாட்டு என்பது சமூக வலைதளங்களில் ரகசிய குழுக்கள் இடையே பகிரப்படுகிறது. மன அழுத்தத்தில் அல்லது மனச்சோர்வில் இருக்கும் வீரர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ப்ளூவேல் கேமை விளையாட அழைப்பு விடுக்கிறார்கள். ரகசிய குழுவின் நிர்வாகி அல்லது கியூரேட்டர் என்று அழைக்கப்படுபவர் புதிதாக இணைந்தவர்களுக்கு 50 டாஸ்க்களை வழங்குகிறார்.

இந்த விளையாட்டில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட 50 டாஸ்க்களையும் ஒரு நாளைக்கு ஒரு டாஸ்க் விதம் 50 நாட்களில் முடித்து அவற்றை ஆவணப்படுத்தி போஸ்ட் இட வேண்டும். ஒருவர் இந்த விளையாட்டை ஆரம்பித்த பின் நிறுத்த முடியாது. அப்படி நிறுத்தினால் அவர்கள் தங்களது டாஸ்கை முடிப்பதற்காக பிளாக் மெயில் செய்யப்படுவதோடு சமூக கேளிக்கும் ஆளாகுவார்கள்.

இறந்த இந்திய மாணவரின் மரணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மிலியோட் இது குறித்து எந்த தகவலும் இல்லை. இது வெளிப்படையான தற்கொலையாக விசாரிக்கப்படுகிறது. வழக்கு முடிவடையும் முன் மருத்துவ ஆய்வாளரின் இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கிறது என மார்ச் 22ஆம் தேதி தெரிவித்தார். அதன்பிறகு இந்த தற்கொலை சம்பவம் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை. 2015 ஆம் வருடத்தில் இருந்து 2017 ஆம் வருடம் வரை ப்ளூவேல் விளையாட்டால் ரஷ்யாவில் ஏராளமான ஒரு தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More: கோடையில் ஈசியாக உடல் எடையை குறைக்கலாம்..!! இதை மட்டும் சாப்பிட்டா போதும்..!!

Advertisement