"3 மாசமா பாத்ரூம் கூட போக விடாம..." அமெரிக்காவில் வன்கொடுமை செய்யப்பட்ட இந்திய மாணவர்.! உறவினர்கள் உட்பட 3 பேர் கைது.!
இந்திய மாணவர் அமெரிக்காவில் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த மாணவரின் உறவினர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மிசோரி மாகாண காவல்துறைக்கு அமெரிக்க சிட்டிசன் ஒருவரிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் மூன்று நபர்கள் ஒரு இளைஞரை கடத்தி வைத்து வன்கொடுமை செய்து வருவதாக அந்த நபர் காவல் துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களால் பிடித்து வைக்கப்பட்ட இந்திய மாணவரை மீட்டிருக்கின்றனர். மேலும் அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் இந்தியாவைச் சேர்ந்த 20 வயது மாணவர் என்றும் தனது உறவினர் மற்றும் இரண்டு நபர்களால் கட்டாயப்படுத்தி வீட்டு வேலை செய்ய பணிய வைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் மூன்று மாதங்களுக்கு மேல் இந்த வன்கொடுமைகளை அனுபவித்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் கழிவறை கூட பயன்படுத்த விடாமல் அந்த இளைஞரை வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த கொடுமை செயலில் ஈடுபட்ட அந்த மாணவரின் உறவினரான வெங்கடேஷ் சத்ரு மற்றும் வெங்கடேஷ் சத்ருவின் நண்பர்களான சரவன் வர்மா, நிகில் வர்மா ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஆள் கடத்தல் மற்றும் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. மீட்கப்பட்ட இளைஞருக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.