For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பூமியை நெருங்கும் ஆபத்து... அடுத்து இதுதான் நடக்கும்... அதிர்ச்சி தகவல் சொன்ன இஸ்ரோ..!!

Indian Space Research Organization (ISRO) has warned that a huge meteorite is coming very close to Earth
04:08 PM Sep 10, 2024 IST | Mari Thangam
பூமியை நெருங்கும் ஆபத்து    அடுத்து இதுதான் நடக்கும்    அதிர்ச்சி தகவல் சொன்ன இஸ்ரோ
Advertisement

பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனை சுற்றிவருவது போன்றே, சூரிய குடும்பத்தின் கோள்கள், சிறுகோள்களுக்கு அப்பால் எண்ணற்ற விண்கற்களும் தமக்கான சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில பூமிக்கு நெருக்கமாக கடக்கையில் அவை பூமியின் இருப்புக்கு பீதி தரவும் கூடும். 2024-ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. இந்த விண்கற்கள் பூமிக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

Advertisement

ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. இந்த நிலையில், மிகப்பெரிய விண்கல் ஒன்று, பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ எச்சரித்துள்ளது.

 2004ம் ஆண்டு அபோபிஸ் என்ற எரிகல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அப்போது, இந்த எரிகல் பூமிக்கு அருகில் வந்தது. இது இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா மற்றும் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தை விட பெரியது. 350 முதல் 450 மீ., விட்டம் கொண்டது இந்த விண்கல். 140 மீ., விட்டத்திற்கு மேல் உள்ள எந்த விண்கல்லும் ஆபத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

எகிப்திய கடவுளான அபோபிசை நினைவு கூறும் வகையில் அவரது பெயர் இந்த விண்கல்லுக்கு சூட்டப்பட்டது. இது 2029ம் ஆண்டும், அதற்கு பிறகு 2036ம் ஆண்டும் பூமிக்கு அருகில் வரும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். பூமியில் இருந்து 32 ஆயிரம் கி.மீ., உயரத்தில் இந்த எரிகல் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், '300 மீ., விட்டத்திற்கு மேல் உள்ள எந்த விண்கல்லும் நிச்சயம் பூமிக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஒரு மிகப்பெரிய எரிகல் மோதினால் மனித இனத்திற்கு நிச்சயம் அபாயத்தை உண்டாக்கும். இந்த எரிகல்லை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க இஸ்ரோ அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க தயாராக உள்ளது' என்றார்.

Read more ; எமனாக மாறிய பலூன்.. தொண்டையில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த 13 வயது சிறுவன்..!!

Tags :
Advertisement