இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 8 பில்லியன் டாலராக அதிகரிப்பு...! மத்திய அமைச்சர் தகவல்
விண்வெளிப் பொருளாதாரம் 8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இது 44 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய அமைச்சர் Indian space economy grows to $8 billion தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்; இந்திய விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துரைத்த அமைச்சர் இந்தத் துறையில் தனியார் முதலீட்டிற்கு அனுமதித்த சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி. விண்வெளி பொருளாதாரம் 8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றும் அடுத்த பத்தாண்டில் 44 பில்லியன் டாலரை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார். உள்நாட்டு ககன்யான் திட்டம், எதிர்வரும் சந்திரயான் -4 (2027), சுக்ராயன் (2028) மற்றும் இந்திய விண்வெளி நிலையம் (2030) போன்ற மைல்கற்கள் இந்தியாவின் வலுவான பாதையை வெளிப்படுத்துகிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அதன் பலதரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். நீடித்த வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் இயக்கமான பிரதமரின் லைஃப் திட்டத்தை நினைவு கூர்ந்தார். நோய்த்தடுப்புக்கான சுகாதாரப் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதில் உலகத் தர அளவீடுகளை பூர்த்தி செய்வதில் இந்தியாவின் தலைமைத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.