இந்திய ரயில்வேயின் வலைதளத்தில் மொத்தம் 1251 நிறுவனங்கள் பதிவு...!
பல்வேறு கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க இந்திய ரயில்வேயின் வலைதளத்தில் மொத்தம் 1251 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
பல்வேறு கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க இந்திய ரயில்வேயின் வலைதளத்தில் மொத்தம் 1251 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 23 திட்டங்களின் மதிப்பு ரூ.43.87 கோடி ஆகும்.ஸ்டார்ட் அப்கள் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் பங்கேற்பின் மூலம் புத்தாக்கத் துறையில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ரயில்வேக்கான புத்தொழில் நிறுவனங்கள்" முன்முயற்சி 13.06.2022 அன்று ரயில்வே அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய ரயில்வே, https://innovation.indianrailways.gov.in/ என்ற புத்தாக்க வலைதளத்தை தொடங்கியது. இக்கொள்கையின் கீழ், ஸ்டார்ட்அப்/ எம்.எஸ்.எம்.இ/ கண்டுபிடிப்பாளர் / தொழில்முனைவோர் திட்டத்தில் உருவாக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகளின் பிரத்யேக உரிமையைக் கொண்டிருப்பார்கள்.