ரயில்வேயில் ஐடிஐ டிப்ளமோ பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு.! ₹.19,900/- சம்பளத்தில் சூப்பரான வேலை.! உடனே அப்ளை பண்ணுங்க.!
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்திய ரயில்வே துறை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மத்திய ரயில்வேயில் அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி காலியாக உள்ள 5696 பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது.
அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது எஸ்.எஸ்.எல்.சி-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றுடன் ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட்/மெயின்டனன்ஸ் மெக்கானிக், மெக்கானிக் (ரேடியோ & டிவி), எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக் (மோட்டார் வெஹிக்கிள்), வயர்மேன், டிராக்டர் மெக்கானிக் மற்றும் டிராக்டர் மெக்கானிக் ட்ரேடுகளில் என்சிவிடி அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் மூன்று வருட டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.சி/எஸ்.டி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக Rs.19,900/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 500 ரூபாய் பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர், பெண்கள், மாற்று பாலினத்தவர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு 250 ரூபாய் பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் மூலமாக தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 19.02.2024 ஆகும். விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விவரங்களை அறிய rrbchennai.gov.in என்ற இணைய முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.