For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரான்சில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்!… 3 நாட்கள் விசாரணைக்குபின் புறப்பட அனுமதி!

08:58 AM Dec 25, 2023 IST | 1newsnationuser3
பிரான்சில் தரையிறக்கப்பட்ட இந்திய விமானம் … 3 நாட்கள் விசாரணைக்குபின் புறப்பட அனுமதி
Advertisement

ஆள்கடத்தல் என்ற சந்தேகத்தின்பேரில் பிரான்சில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம், 3 நாட்கள் விசாரணைக்கு பிறகு இன்று நிகரகுவா நோக்கி செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

துபாயில் இருந்து நிகரகுவா நோக்கி 303 பேருடன் விமானம் ஒன்று பயணித்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரான்சின் மார்னே பகுதியில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று கூறப்பட்டது. மேலும், அதில் ஆள் கடத்தல் நடந்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம், இதுதொடர்பாக இந்தியத் தூதரகம் உரிய அனுமதி பெற்றதாக இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் விமானத்தில் சென்றவர்களில் சிலர் தமிழ் மொழியிலும் பேசினர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களா? இலங்கையை சேர்ந்தவர்களா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்கு விமானம் பிரான்ஸ் நாட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆள்கடத்தல் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் துபாயில் இருந்து தனியார் விமானத்தை பிரத்யேகமாக வாடகைக்கு பிடித்து நிகரகுவா சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

மேலும் சிலர் சட்டவிரோதமாக நிகரகுவாவில் இருந்து அமெரிக்கா, கனடா செல்ல இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது உறுதி செய்யப்படவில்லை. இதையடுத்து பிரான்சில் இருந்து அந்த விமானத்தை பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 3 நாட்களுக்கு பிறகு இன்று அந்த விமானம் பிரான்சில் இருந்து நிகரகுவா நோக்கி பயணிக்க உள்ளது. முன்னதாக 3 நாட்களாக விமானம் பிரான்சில் நிறுத்தி வைக்கப்பட்டதால் அதில் பயணித்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான உதவிகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement