இஸ்ரேல் பாலஸ்தீன் போரில் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி வீரர்.! வருத்தம் தெரிவித்த பண்பாட்டு மையம்.!
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் பிரச்சனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீராத பிரச்சனையாக தொடர்ந்து வருகிறது. சில நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் மீண்டும் இரு நாடுகளும் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலில் ஏராளமான போர்வீரர்கள் மற்றும் பொதுமக்களும் அப்பாவி குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேலிய ராணுவம் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா பகுதிக்குள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக போர் நிலவும் பகுதியிலிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேலிய வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்து இருக்கிறது. மேலும் இது தொடர்பாக இஸ்ரேல் வருத்தமும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ஆஷ்டோட் பகுதியைச் சேர்ந்த 34 வயதான கில் டேனியல்ஸ் என்ற ராணுவ வீரர் தான் கொல்லப்பட்டிருக்கிறார்.
இவர் இந்திய வம்சாவளியைச் சார்ந்த இஸ்ரேலிய ராணுவ வீரர். நாட்டுக்காக உயிர் நீத்த இந்த வீரரை நினைத்து இஸ்ரேல் பெருமைப்படுவதாக தெரிவித்திருக்கிறது. மேலும் இவரது இறப்பிற்கு இஸ்ரேல் மற்றும் இந்திய கலாச்சார மையம் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளது.