இந்திய கடற்படை பெண் அதிகாரி சாதனை!. உலகின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையை அளந்து அசத்தல்!
Kilimanjaro: தான்சானியாவில் உள்ள உலகின் மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோ மலையை தனது கணவரின் உதவியுடன் அளந்து இந்திய கடற்படையில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
மலையேற்றம், ஒவ்வொரு நபரும் வாழ்வில் ஒருமுறையாவது செய்ய ஆசைப்படும் விஷயம். அதன் சவாலான நிலப்பரப்புகளில் மலையேற்றம் செய்வது சாதனையாக கருதப்படுகிறது. ஆப்பிரிக்காவின், டான்சானியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்குக்கும் உயராமான, எரிமலை வகையை சார்ந்த மலை, கிளிமாஞ்சாரோ. ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள மலைகளில் மிக உயர்ந்த மலை. இது கடல் மட்டத்திலிருந்து (Mean Sea Level) 5895 மீட்டர் (19,340 அடி) உயரத்தில் உள்ளது. இந்த மலையின் மிக உயர்ந்து முகட்டு "உகுரு (Uhuru)" என்றழைக்கப்படுகிறது. இது தவிர கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என இதர மூன்று எரிமலை முகடுகள் உள்ளது. கிளிமாஞ்சாரோ, எந்த மலைத்தொடரையும் சாராத தனி மலையாகும். இமயமலையை ஒப்பிடும்போது கிளிமஞ்சாரோ உயரத்தில் குறைந்தது தான்.
ஆனால் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் ஒப்பிடும்போது கிளிமாஞ்சாரோ மிக உயரமானது. தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மலையேற்ற குழுவினர் இங்கு வருகை புரிகின்றனர். இதன்படி இந்திய கடற்படையில் பணிபுரியும் பெண் அதிகாரியான Cmde திவியா கௌதம் மற்றும் அவரது கணவர் Cmde கௌரவ் கவுதம் (ஓய்வு) ஆகியோர் கிளிமாஞ்சாரோ மலையை அளந்து சாதனைப் படைத்துள்ளனர். தம்பதியருக்கு மலை ஏறும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய கடற்படை தனது எக்ஸ் தளத்தில், உலகின் மிக உயரமான சுதந்திரமான மலை மற்றும் ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலையான கிளிமஞ்சாரோ மலையை 19341 அடி உயரத்தில் வெற்றிகரமாக அளந்ததற்காக இந்திய கடற்படை ஜோடியான சர்க் சிஎம்டி திவியா கௌதம் மற்றும் சிஎம்டி கௌரவ் கவுதம் (ஓய்வு) ஆகியோருக்கு இந்திய கடற்படை வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளது.
Readmore: எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்கள் பாதுகாப்பற்றவை!. மாசு இருப்பதை உறுதிப்படுத்திய ராஜஸ்தான் அரசு!