"சும்மா மோடியை அசிங்கப்படுத்திரிங்கலே.." கோடிகளைக் கொட்டி முதலீடு செய்வது யார்.? தமிழக பாஜக அதிரடி கேள்வி.!
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கிய நடைபெற்று வருகிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற தமிழக அரசின் இலக்குடன் இந்த வர்த்தக மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 5.5 லட்சம் கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக அரசுடன் கையெழுத்தாகி இருக்கிறது.
இன்று நடைபெறும் மாநாட்டிலும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்கி தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்த மாநாடு உதவும் என மு க ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருந்தார். இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இனியாவது கார்ப்பரேட் நிறுவனங்களை குறை சொல்வதை நிறுத்த வேண்டும் என தமிழக பாஜக தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக பேசியிருக்கும் பாஜக விவசாய அணிகளின் தலைவர் திரு நாகராஜன் " இந்திய நிறுவனங்களான ரிலையன்ஸ் டாட்டா ஜிண்டால் போன்றவை தமிழ்நாட்டில் பல கோடிகளை முதலீடு செய்து தொழில் தொடங்கியிருக்கிறது. மேலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கி தந்திருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நிறுவனங்களில் அதிக முதலீடு செய்திருப்பது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். எனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆகியவை கார்ப்பரேட்டுகளை குறை கூறுவதை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்திருக்கிறார். மேலும் கார்ப்பரேட்டுகளின் காவலன் மோடி என அவர்கள் பிரதமரை கொச்சைப்படுத்துவதையும் வாபஸ் பெற வேண்டும் என கூறியிருக்கிறார் திரு நாகராஜ்.