Dubai Rain | அவசர உதவி எண்களை அறிவித்த இந்திய தூதரகம்.!! சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளை மீட்க நடவடிக்கை.!!
Dubai: ஐக்கிய அரபு அமீரகத்தில் 75 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு கடும் மழை பெய்து வருகிறது. துபாயில் சாலைகள் கட்டிடங்கள் மற்றும் விமான நிலையத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. துபாயில் இருக்கும் இந்திய பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தவும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை நீட்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
துபாய்(Dubai) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வடக்குப் பகுதியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களுக்கு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஹெல்ப்லைன் எண்களை வழங்கியுள்ளது. சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு வசதி செய்வதற்காக இந்திய அரசாங்கம் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தொடர்ச்சியான ட்வீட்களில், துபாயில் உள்ள இந்திய மிஷன் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டு, துபாயில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இடையே தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்தது . இந்திய சமூக அமைப்புகளின் உதவியுடன் நிவாரண நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், விமான நிறுவனங்களின் வழக்கமான அறிவிப்புகள் பயணிகளுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய பயணிகளை பாதுகாப்பாக நாட்டிற்கு அனுப்ப யுஏஇ அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்களின் வழக்கமான அறிவிப்புகள் பயணிகளுக்கு தெரிவிக்கப்படுகின்றன. இந்திய சமூக அமைப்புகளுடன் இணைந்து நிவாரண நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன," என சமூக வலைதளத்தில் இந்திய துணை தூதரகம் பதிவு செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கனமழை மற்றும் புயலை சந்தித்துள்ளது. அதன் முக்கிய நகரான துபாய் நகரம் மழை வெள்ளத்தால் முடங்கிப் போனது. போக்குவரத்து மற்றும் விமான சேவைகளும் முற்றிலுமாக முடங்கின. துபாய் விமான நிலையம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இயல்பு நிலையை மீட்டெடுத்து இருக்கிறது. இன்னும் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 1949 ஆம் வருடத்திற்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் பெய்த கனமழை என அமீரகத்தில் இயங்கி வரும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அரேபிய தீபகற்பத்தில் மழை என்பது அரிதான ஒன்றாக இருந்தது. கோடை காலத்தில் காற்றின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆனால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை ஐக்கிய ராப் அமீரகம் செய்து வரும் கிளவுட் சீடிங் குறித்த கேள்வியை எழுப்பி இருக்கிறது.