For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை இணைந்து ‘டெசர்ட் நைட்’ விமானப்படை போர் பயிற்சி...!

09:08 AM Jan 25, 2024 IST | 1newsnationuser2
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை இணைந்து ‘டெசர்ட் நைட்’ விமானப்படை போர் பயிற்சி
Advertisement

இந்திய விமானப்படை, பிரெஞ்சு விமானப்படை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை இணைந்து ‘டெசர்ட் நைட்’ விமானப்படைப் போர்ப்பயிற்சியை மேற்கொண்டன. இந்திய விமானப்படை சார்பில் சுகோய்-30 எம்கேஐ, மிக் -29, ஜாகுவார், அவாக்ஸ், சி-130-ஜே உள்ளிட்ட விமானங்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. பிரான்ஸ் சார்பில் ரஃபேல் போர் விமானம், மல்டி ரோல் டேங்கர் ஆகியவை பங்கேற்றன.

Advertisement

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படை சார்பில், எஃப்-16 ரக விமானம் இதில் பங்கேற்றது. இந்தக் கூட்டு விமானப்படைப் பயிற்சி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் நடைபெற்றது.மூன்று நாடுகளின் விமானப்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது இந்த ‘டெசர்ட் நைட்’ விமானப்படைப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

பயிற்சிகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள், செயல்பாட்டு அறிவு, அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ள உதவின. இத்தகைய பயிற்சிகள், இந்திய விமானப்படையின் வலிமையை வெளிப்படுத்துவதோடு பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளுடன் ராணுவ உறவுகளை மேம்படுத்தவும் உதவும்.

Advertisement