For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'அதிகார வர்க்கத்துக்கு அறைகூவல் நீயே...' அனிருத்தின் தரமான சம்பவம்.. வெளியானது இந்தியன் 2 படத்தின் பாடல்!

05:59 PM May 22, 2024 IST | Mari Thangam
 அதிகார வர்க்கத்துக்கு அறைகூவல் நீயே     அனிருத்தின் தரமான சம்பவம்   வெளியானது இந்தியன் 2 படத்தின் பாடல்
Advertisement

இந்தியன் – 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான படம், ‘இந்தியன்’. இப்படத்தில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.

நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் – 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நேற்று (மே.21) இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடலின் புரோமோ விடியோவை வெளியிட்டிருந்த நிலையில், இன்று முழுப் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையில், பா.விஜய் வரிகளில் உருவான இப்பாடல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியன் – 2 ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

உற்சாகத்தைக் கூட்டும் இந்தப் பாடல் வீரத்தை பறைசாற்றும் வகையில் எழுதப்பட்டுள்ளது. “பாரா வருவது ஓராட் படையா...வீரா விழுப்புண் அலங்காரா” என தொடங்கும் பாடலின் பல்லவி கவனிக்க வைக்கிறது. “என் தாய் மண்மேல் ஆணை, இது தமிழ் மானத்தின் சேனை, வெள்ளை ரத்தம் தொட்டு வாளில் ஏற்று சாணை”, “அடிமைகள் ரத்ததுக்கு வெப்பம் தந்த வீரத் தீயே” “அதிகார வர்த்துக்கு அறைகூவல் நீயே” போன்ற வரிகள் பா.விஜய் டச். ஹைபீச்சில் சென்றுக்கொண்டிருக்கும் பாடலின் நடுவே பெண் குரல் மெலடியாக ஒலிப்பது ‘கேஜிஎஃப்’ பட ‘தீரா தீரா’ பாடலை நினைவூட்டுகிறது.

Read More ; “என் மனைவி டெலிவரி அன்று அந்த நடிகர் செய்த செயல்.. மறக்கவே மாட்டேன்!” – அசின் கணவர்

Advertisement