முதல் நாடாக 6ஜியை களமிறக்கும் இந்தியா..!! இது பிரதமரின் ஆசையாம்..!! எப்போது வருகிறது..?
உலக நாடுகளை வியப்படைய வைக்கும் வகையில், இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.
உலக நாடுகளை முந்திக்கொண்டு, உலகத்தின் முதல் 6ஜி தொழில்நுட்பத்தை (6G Technology) பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ள நாடாக இந்தியா இருக்கப்போகிறது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்திருக்கிறார். இந்தியாவுக்கு 6ஜி தொழில்நுட்பம் வரப்போகிறது..? எந்த டெலிகாம் நிறுவனம் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் என்று பல கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கும். அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா தெரிவித்துள்ளார். இந்திய தற்போது மிக வேகமாக 4ஜி மற்றும் 5ஜி தளத்தில் வளர்ந்து வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா 4ஜி மற்றும் 5ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் அசூர வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்தகட்டமாக 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.
இது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), பி.எஸ்.என்.எல். (BSNL), மற்றும் விஐ (Vi) என்றழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு பயனர்களுக்கு புதிய 6ஜி தொழில்நுட்பத்தை இந்தியா வழங்கும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற 8-வது இந்திய மொபைல் காங்கிரஸில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா 6G தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் இந்தியாவின் முற்போக்கான திட்டங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை 6G பயன்பாட்டில் முன்னோடியாக இருப்பதற்கான பிரதமர் மோடியின் ஆசைக்கு ஏற்ப, உலகளாவிய தொழில்நுட்ப போட்டியில் இந்தியாவை முன்னணியில் நிறுத்தும் நோக்கத்துடன் செயல்படவுள்ளது. இந்த முன்னேற்றங்களின் மையத்தில், 6G தொழில்நுட்பத்தை பொது மக்களுக்கு அணுகக்கூடியதாகவும், மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும்.