முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'திமுக - 39, பாஜக - 0' ; வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.!

06:09 PM Feb 08, 2024 IST | 1newsnationuser7
Advertisement

2024 ஆம் வருடத்திற்கான பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நான் இருக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து இருந்தார். மேலும் பாஜக தனியாக 370 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் ஆருடம் கூறினார். இந்நிலையில் 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது.

இந்தியா டுடே சி-ஓட்டர் கருத்துக்கணிப்புகள் இன்று வெளியானது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை திமுக மற்றும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. மேலும் திமுகவிற்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக 1 தொகுதியை கூட கைப்பற்றாது என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. கேரளாவின் 20 பாராளுமன்ற தொகுதியையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
DMK 39Election Poll 2024india todaypoliticstn
Advertisement
Next Article