இந்தியாவில் அச்சுறுத்தும் Mpox வைரஸ்..! பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது WHO..!!
உலக சுகாதார அமைப்பு (WHO) mpox பரவியிருப்பதைக் கருத்தில் கொண்டு இரண்டாவது முறையாக பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என அறிவித்தது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 524 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதில் 96% பாதிப்புகள் மற்றும் இறப்புகள் காங்கோவில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த சோதனைகளுக்கு பின்னரே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாய் சென்று வந்த இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறி காணப்பட்டது. முதலில் அதிக காய்ச்சல் காரணமாக மஞ்சேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார். பாதிக்கப்பட்ட இளைஞரின் மாதிரிகள் பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு எம் பாக்ஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இது இரண்டாவது பாதிப்பாகும்
கேரளா வழக்குக்கு முன்பு, ஹரியானாவின் ஹிசாரில் வசிக்கும் 26 வயது இளைஞரும் கிளேட் 2 வகை எம்பாக்ஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) mpox இன் பரவல் மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் பரவியிருப்பதைக் கருத்தில் கொண்டு இரண்டாவது முறையாக சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என அறிவித்தது.
Read more ; Viral Video | ஆசை ஆசையாய் போட்ட பூக்கோலம்.. ஒரே நிமிடத்தில் காலால் அழித்த பெண்..!! – நெட்டிசன்கள் கண்டனம்