உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா..!!
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழந்து மைதானத்தை விட்டு வெளியேறினார்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. 1999-2000ல் தென்னாப்பிரிக்கா 2-0 என வென்ற பிறகு, மும்பையில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 2-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது. இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 62.82 சதவிகிதத்திலிருந்து 58.33 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 62.50 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 55.56 சதவிகித வெற்றிகளுடன் இலங்கை அணி மூன்றாவது இடத்திலும், 54.55 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி நான்காவது இடத்திலும், 54.17 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
முதலிடத்தில் வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவில் அதன் இடத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்துள்ளது. இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தரவரிசையில் முதல் இரண்டு இடங்களுக்குள் நீடிக்க இரு அணிகளுக்கும் பார்டர் - கவாஸ்கர் தொடரை வெல்வது இன்றியமையாததாக மாறியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Read more ; 2 மணி ஆனா இங்கு மழை தான்.. பல வியப்பூட்டும் கலாச்சாரம் கொண்ட நகரம் எங்க இருக்கு தெரியுமா?