For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"ரஷ்யாவில் உள்ள இந்திய மக்கள் வெளியேறுங்கள்..!!" - தூதரகம் அறிவுறுத்தல்

India issues advisory to nationals in three regions in Russia amid security concerns
07:55 PM Aug 14, 2024 IST | Mari Thangam
 ரஷ்யாவில் உள்ள இந்திய மக்கள் வெளியேறுங்கள்        தூதரகம் அறிவுறுத்தல்
Advertisement

ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசித்துவரும் இந்திய மக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சில தினங்களிலே, ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசித்துவரும் இந்திய மக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “சமீபத்திய சம்பவங்களை கருத்தில்கொண்டு ரஷிய நகரமான பிரையன்ஸ்க், பெல்கோரோடில், குர்ஸ்க் மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், இப்பகுதிகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு, இந்தியத் தூதரகத்தை தொடர்புகொள்ள விரும்புவோர் +7 965 277 3414 என்ற எண்ணையோ அல்லது edu1.moscow@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்" எனக் கூறியுள்ளது.

Read more ; சுதந்திர தினம் 2024 | பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன கிடைத்தது? 

Tags :
Advertisement