முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இந்தியாவே வியந்துருச்சு’..!! ’இது நமது பயணத்தின் முக்கிய மைல்கல்’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் பெருமிதம்..!!

08:46 AM Jan 09, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் 27 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த மாநாடு குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இருநாள் மாநாடு - 20,000 தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.

நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு இளைஞர்களும், மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில், மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு. 'எல்லோருக்கும் எல்லாம், 'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி’ என்ற நமது பயணத்தின் இது முக்கிய மைல்கல்!“ என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
உலக முதலீட்டாளர்கள் மாநாடுசென்னைபுரிந்துணர்வு ஒப்பந்தம்முதலமைச்சர் முக.ஸ்டாலின்வேலைவாய்ப்புகள்
Advertisement
Next Article