"இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசின் செயல்பாடே காரணம்.." முன்னாள் நிதியமைச்சர் குற்றச்சாட்டு.!
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மேக் இன் இந்தியா,ஒளிரும் இந்தியா என பல திட்டங்களை கொண்டு வந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் பின்னடைவு சந்தித்திருக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் அனைத்து பொருளாதார பின்னடைவுகளுக்கும் மத்திய அரசுதான் காரணம் என குற்றம் சாட்டியிருக்கிறார். இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான பா.சிதம்பரம்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் நாட்டில் பணவீக்க விகிதம் இந்த அளவிற்கு குறைந்த மோசமாக இருப்பதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் செயலற்ற தன்மையே முக்கிய காரணம் என குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கேட்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதுபோன்ற விஷயங்கள் மத்திய அரசின் நிர்வாக சீர்கேட்டினால் தான் நடைபெறுகிறது என சுட்டிக்காட்டி இருக்கும் அவர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை எனவும் கடிந்து கொண்டுள்ளார். பொதுமக்களுக்கு வழங்க இருந்த இலவச ரேஷன் கார்டுகள் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதையும் கேள்வி எழுப்பி இருக்கிறார் அவர் .
இவற்றிற்கெல்லாம் மத்திய அரசின் தீர்க்கமான நிர்வாகமற்ற தன்மையே காரணம். நாட்டின் பொருளாதாரம் இந்த அளவுக்கு சரிந்து இருப்பதற்கு மத்திய அரசுதான் பொறுப்பிற்கு வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார். இவர் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.