For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

5G அலைக்கற்றை ஏலம் | ரூ.11,340 கோடி வருவாய் ஈட்டியது இந்தியா!!

The government has reportedly stated that they received Rs 11,340 crore through the auction of a total quantum of 141.4 MHz spectrum. This year (2024), the auction has seen activity in 900MHz, 1800MHz, 2100MHz and 2500 MHz bands.
08:57 AM Jun 27, 2024 IST | Mari Thangam
5g அலைக்கற்றை ஏலம்   ரூ 11 340 கோடி வருவாய் ஈட்டியது இந்தியா
Advertisement

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தேவை கருதி 10,500 மெகா ஹெர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றையை மத்திய அரசு ஏலம் விடுகிறது. இந்த மொத்த ஏலத்தின் மதிப்பு 96,238 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. 5ஜி சேவையை நாடு முழுக்க விரிவாக்க வேண்டியுள்ள நிலையில் அதற்காக நிறுவனங்கள் அலைக் கற்றைகளை ஏலத்தில் எடுக்க உள்ளன. 2022-ல் நடத்தப்பட்ட 5ஜி ஏலத்தில் அரசுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த ஏலத்தின் வாயிலாக, அரசுக்கு 96,238 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசின் இந்த மதிப்பீட்டுத் தொகையைக் காட்டிலும், 12 சதவீதத்திற்கும் குறைவாகவே கிடைத்துள்ளது.  800 மெகா ஹெர்ட்ஸ் முதல் 26 ஜிகா ஹெர்ட்ஸ் வரையிலான மொத்தம் 10 ஜிகா ஹெர்ட்சுக்கான அலைக்கற்றை ஏலத்தில், 11,340 கோடி ரூபாய் வரை ஏலம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏலத்தின் முதல் நாளான செவ்வாயன்று, ஐந்து சுற்று ஏலம் நடந்தது. ஆனால், இரண்டாம் நாளான நேற்று, முந்தைய நாளை விட ஆர்வம் குறைவாக இருந்த காரணத்தினால், காலை 11:30 மணிக்கே ஏலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் எடுக்கப்பட்ட ஏலத்தை விட, இரண்டாம் நாளில் எடுக்கப்பட்ட ஏலத்தின் மதிப்பு கூடவும் இல்லை; குறையவும் இல்லை. மொத்தம் நடந்த ஏழு சுற்றுகளில் 140 முதல் 150 மெகா ஹெர்ட்ஸ் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது..

'ஏர்டெல்' நிறுவனம் 6,857 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், அனைத்து ஏலங்களிலும் கிட்டத்தட்ட பாதியை எடுத்தது. அதன் மதிப்பு 88,078 கோடி ரூபாயாகும். இதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 43,084 கோடி ரூபாய்க்கும், வோடபோன் ஐடியா 18,799 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தன.

Read more ; யூரோ 2024!. ரொனால்டோவுக்கு அதிர்ச்சி!. ஜார்ஜியா, துருக்கி அணிகள் த்ரில் வெற்றி!.

Tags :
Advertisement