ஜம்மு - காஷ்மீரில் முன்னிலை வகிக்கும் இந்தியா கூட்டணி..!! இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!!
ஜம்மு - காஷ்மீரில் இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்று வரும் சூழல், தற்போது நிலவி வருவதால் டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றுள்ளது. மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது. இதனால் இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இங்கு தேசிய மாநாடு கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலையில், பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்தியா கூட்டணி வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி 50 தொகுதிகளிலும், பாஜக 34 தொகுதிகளிலும், பிடிபி 4 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 11 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. ஜம்மு - காஷ்மீரில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் கூட்டணி வெற்றிப் பெறுவதற்கான சூழல், தற்போது நிலவி வருவதால் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
Read More : கள்ள பொண்டாட்டியை வைத்து கள்ளா கட்டிய காவலர்..!! பக்கா மூவ்..!! வலையில் சிக்கியது யாரெல்லாம் தெரியுமா..?