முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உற்பத்தி குறியீடு டிசம்பர் மாதத்தில் 3.8 சதவீதம் அதிகரிப்பு...! மத்திய அரசு தகவல்..!

08:52 AM Feb 02, 2024 IST | 1newsnationuser2
Advertisement

எட்டு முக்கிய தொழில்துறைகளின் உற்பத்தி குறியீடு 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

எட்டு முக்கிய தொழில்துறைகளின் ஒருங்கிணைந்த உற்பத்தி குறியீடு 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2023 டிசம்பரில் 3.8 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. நிலக்கரி, இயற்கை எரிவாயு, எஃகு, உரங்கள், சுத்திகரிப்பு பொருட்கள், சிமெண்ட், மின்சாரம் உள்ளிட்ட எட்டு உற்பத்தி துறைகள் 2023 டிசம்பர் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியை விகிதத்தை பதிவு செய்துள்ளது

இந்த எட்டு முக்கிய தொழில்துறைகள் மொத்த உற்பத்தி குறியீட்டில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன. செப்டம்பர் 2023-ம் ஆண்டுக்கான எட்டு முக்கிய தொழில்துறைகளுக்கான உற்பத்தி குறியீடுகளின் இறுதி செய்யப்பட்ட வளர்ச்சி விகிதம் 9.4 சதவீதமாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 8.1 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும்.

Advertisement
Next Article